வனவியல்
மரப்பயிர்களில் விதையில்லாப் பெருக்கம்
மூங்கில்
2

அ. மூங்கில் கொத்துத் துண்டு துண்டுகள்
இரட்டை கணுக்களைக் கொண்ட துண்டு துண்டுகளின் முதல் கணுக்கு மேலிருக்கும் பகுதியிலிருந்து மார்ச் – ஏப்ரல் மாதத்தில் வெட்டி விட வேண்டும். இலைகளும், பக்க கிளைகளை நீக்கி விட வேண்டும். அவ்வாறு நீக்கும் பொழுது கிளை மொட்டுகளை சேதப்படுத்தாமலிருக்க வேண்டும். துண்டு துண்டுகளை ஈர கோனிப்பையில் அல்லது ஈரப்படுத்திய மரத்தூள்கள் நிரம்பிய அட்டைபெட்டியில் நாற்றுப்பண்ணைக்கு கொண்டு போக வேண்டும். இடைக்கணுக்களின் நடுவில் இரண்டு ஓட்டைகள் போட வேண்டும். 100 பி.பி.எம். என்.ஏ.ஏ.    கலவையிலிருந்து 100 மில்லி லிட்டரை ஓட்டைக்குள் ஊற்றி அதை பாலித்தீன் பையில் (60 செ.மீ * 6 செ.மீ) வைத்து இருக்க கட்டி விட வேண்டும். பின் அதன்மேலே மணலை 2 – 3  செ.மீ அளவு நன்கு மூடி விட வேண்டும். முளைத்த தண்டுத்துண்டுகளை நடுவயலில் நடுவதற்கு பயன்படுத்திக்கலாம்.
ஆ. பதியன் போடுதல்
கிளையை வளைத்து நிலத்தில் நடும்பொழுது வேர்களும் தண்டுகளும் கணுக்களில் முளைக்கும். பிறகு, முளைத்தச் செடியை வெட்டி தனியாக நட வேண்டும். ஆனால் இந்த முறையில் நடும்பொழுது இச்செடிகளின் வாழ்நாள் காலம் குறைவாக இருக்கிறது.
இ. சவுக்கு
5 – 7 செ.மீ துண்டுகளை 0.01 % மெர்க்கியூரிக் குளோரைடில் 30 வினாடிகள் நேர்த்தி செய்வதன் மூலம் பூஞ்சானிலிருந்து விடுபட முடியும். வெவ்வேறு வேர்கள் விடும் ஊக்கிகளை வெட்டின பகுதியில் இட வேண்டும். அதனை முக்குவதற்கு முன், மண்புழு உரத்திற்கு இடமாற்றி பனிப்புகை அறையில் 48 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து கடினப்படுத்தப்பட்ட நாற்றுகளை நடுவயலில் நட வேண்டும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016